குருவிக் கூடு

June 22, 2009

கவிதை இங்கே

http://thamikavithaikal.blogspot.com/2009/06/blog-post_22.html

Advertisements

மச்சான் திரும்பிவரக் காத்திருப்பேண்டி…

June 21, 2009

கவிதை இங்கே:

http://thamikavithaikal.blogspot.com/2009/06/blog-post_20.html


ஐவருக்கும் காதலன்

June 20, 2009

நிலம்:
பச்சைப் பட்டுடுத்திப்
பாதிக் கண்மூடி
நாணித் தலை குனிந்தாய்
நங்கையே
எந்த
நிலம் நோக்கி?

நீர்:
வெள்ளை உள்ளத்தை
வெள்ளமே நீ காட்டுகின்றாய்
உன்னையே பார்த்தாலும்
என்னையே நீ காட்டுகின்றாய்
தண்மை அன்பை
தரணிக்கே நீ ஊட்டுகின்றாய்!
தண்ணீரே அறிவாயா
நீரின்றி நானில்லை…

நெருப்பு:
உலகுக்கு நீ வேண்டும்
உணவுக்கு நீ வேண்டும்
உயிராக நீ வேண்டும்
உளத்தே நீ வேண்டும்
மழையாக்க நீ வேண்டும்
ஒளியாக்க நீ வேண்டும்
குளிரோட்ட நீ வேண்டும்
எரியூட்ட நீ வேண்டும்

மயக்கத்தைத் தோலுரிக்க
இணக்கமாய் நீ வேண்டும்
தயக்கத்தை வேறருக்க
இயக்கமாய் நீ வேண்டும்!
நெஞ்சத்தில் நீ இருந்தால்
அஞ்சாதோ எதிரணியும்
மஞ்சத்தில் வந்தமர்ந்தால்
பற்றாதோ மனமிரண்டும்

ஆன்ம ஜோதியாய்
அகத்தே இருளகற்றி
பொருப்பாக இருப்பாயா?
நெருப்பான என்கண்ணே?

காற்று:
தேகத்தே உயிர்தரிக்க
தேவை திடப்பொருள்(?) நீ…
தென்றல் என்றாலும்
தேகமே உன்பொருள் காண்!

ஆனவை ஏதிருந்தும்
அத்தனையும் வீணே காண்
சுவாசமிலாதே நான்
சுகிப்பது ஏதும் உண்டோ?

ஒலியென நீ அல்லால்
உரைத்திட மொழி ஏது?
அலையென நீ அல்லால்
அழைத்திட வழி ஏது?

ஆகாயம்:
நெஞ்சில் சிறகடித்து உன்
நினைவாய் இருக்கையிலே
பஞ்சாய் பறக்குதடி மனம்
பரிவட்டம் கொள்ளுதடி…

அண்ட வெளியிடையே மனம்
ஆனந்தக் களிப்பிடையே
வண்டாய் பறக்கையிலே வானம்
வசப்பட்டு இனிக்குதடி…

துள்ளிக் குதிக்குதடி தோழி
தொடரும் பெருவெளியில்
எல்லை காணாதே மனம்
ஏகிக் களிக்குதடி…

***


நிலமகள்.

June 19, 2009

பச்சைப் பட்டு உடுத்தி
பாதிக் கண்மூடி; நாணித்
தலை குனிந்தாய்; நங்கையே
எந்த நிலம் நோக்கி?

சுட்டும் கதிரவனை – தினம்
சுழன்று தனை மறந்தே
வட்டம் போடுவது ஏன்
வருடம் கழிவதும் ஏன்?

எட்டும் தூரத்திலே நிலவு
ஏங்கித் தவிக்கிறதே – நின்னை
வட்டம் அடித்தே தன்
வாழ்வைக் களிக்கிற தேன்?

மாதம் ஒரு முறைக்கே
வானில் மறையும்  நிலவு
வளர்ந்து பெரிதாகும் பின்னர்
வாடித் தேகம் சிறிதாகும்

ஏதுக்குக் காலம் எல்லாம்
ஓர் வழிப் பாதையிலே
தூதுக்கும் யாரும் இன்றி
தொடர்ந்தே காதல் செய்வீர்?

மேதினி முழுவதுமே கோடி
மின்னிடும் வைரங்கள் போல்
வான்வெளி மீதினிலே வெள்ளி
மீன்களின் கண் அடிப்போ?

நாட்டியம் ஆடுகிறாய் நங்கை
நாளும் பொழுது எல்லாம்
காற்றினில் ஆடுகிறாய் மாதே
கடல் அலையிலும் ஆடுகின்றாய்

வெம்மை ஆகுவையோ மேனி
எழில் வேகும் போழ்தினிலே
நின்றன் தேகம் குளிர்ந்திடவோ
மழை மேகம் பொழிவதெல்லாம்?

அண்டப் பெரு வழியே
ஆடும் நாயகியே; உந்தன்
கண்டக் குரல் ஒலிதான்
பிரணவ ஓமென ஆனதுவே

உடலும் எமக்கு தந்து
உயிர் அதிலே பொதிந்து
நாளும் உணவு ஈந்து
வாழும் வழியும் செய்தாய்

ஆக்கி ஆட்டுவித்து; எம்மை
அன்பில் அரவணைத்தே; நித்தம்
தூக்கிச் சுமக்கின்றாய்; நெஞ்சில்
தூங்கவும் வைக்கின்றாய், அம்மா!

நாடகம் முடிந்த பின்னும்
உன்னில் ஒடுங்க வைத்தே
தியாகம் காட்டுகின்றாய்; தாயே
எமக்கு ஞானம் ஊட்டுகின்றாய்!

அறிவுத் திருமகளே! எங்கள்
அன்புப் புவி மகளே !
அருமைத் தலைமகளே! எங்கள்
அன்னை நில மகளே!

***


இருளில் ஒளி?

June 18, 2009

மீண்டும்
ஒரு
தீக்குச்சியைப் பற்ற வைத்து
என் இருண்ட வீட்டிற்குள்…
தேடிய போதுதான்
தெரிந்தது
எஞ்சியிருந்த
எனது
ஒரே ஒரு
மெழுகுவர்த்தியையும்
யாரோ
திருடி விட்டார்கள்…
தீர்மானித்து விட்டேன்
இனி தீக்குச்சிகளே
தேவையில்லை என்று…
ஆம்
எரிவதற்கு என்னிடம்
இனி
என்ன இருக்கிறது?
என்னைத் தவிர…

இருளைப் பழகிய கண்கள்
உடைந்து போன
உடல் பாகங்களுக்கு
உத்தேசமாகத் தடவிக்
கொடுக்க
சுவாசித்துக் கொண்டிருக்கிறேன்
இன்னும்…

இப்போது உயிருக்கென்ன
உணவா தேவை?
கண்களை மூடினாலும்
கனவுகள் உறங்கவில்லை…
உலகமே ஒருங்கி உடைத்தது
என் உடலை மட்டுந்தானே?
உளத்துக்குள் இன்னும்
ஒளி தெரிகிறதே…
மரணம் தூரமாம்
மனது சொன்னது
ரணங்கள் ஆறட்டும்…

எங்கோ தெரியும்
வெளிச்சப் புள்ளி
விடியலைச் சத்தியம் என்றது…

தூங்கும்போதும்
இன்னும்
நான்
சுவாசித்துக் கொண்டுதான்
இருக்கிறேன்…


கலைமகள் என்ன விலைமகளா?

June 17, 2009

கருணாநிதிக்கு நோபல் பரிசு….
கெடக்குறதெல்லாம் கெடக்கட்டும்
கிழவனைத் தூக்கி
மணையிலே வைன்னாங்களாம்….   🙂  🙂  🙂

அதற்காக:

.       தத்தென்று பித்தென்று
.              தமிழிலே எழுதினால்
.                      தத்துவம் ஆகி விடுமா?
.
.       பத்து இலட்சத்தில்
.              பலர்கூடிப் பிதற்றினால்
.                     முத்தாக மாறி விடுமா?
.
.
.       சத்தில்லா சொற்றொடரும்
.              தரமற்ற கவிதையும்
.                     சங்கத்தமிழ் ஆகி விடுமா?
.
.       பித்தளை ஈயம்
.              பெருங்காயப் பாத்திரம்
.                     தங்கமென்று தேறி விடுமா?
.
.
.       எத்தனை காலத்து
.              இலக்கிய மரபுகள்
.                     முத்தமிழ் கற்றுத் தருமா?
.
.       இத்ததும் பீத்ததும்
.              இன்றைய சொத்தென்று
.                     செந்தமிழ் செத்து விடுமா?
.
.
.       நயமற்ற கவிதையை
.              மொழிமாற்றுச் செய்தாலே
.                     நல்லவை ஆகி விடுமா?
.
.       சுயமற்ற உளரலைச்
.              சுகமான பொருளென்று
.                      சொன்னாலே விற்று விடுமா?
.
.
.       பாவாடை மேலாடை
.              தூக்கியே பார்த்திட
.                     ஆங்கிலம் பொருள் தருமா?
.
.       பதைக்கின்ற செயலெலாம்
.               பரவசம் எனக்கூற
.                      பாவலற்கு மனம் வருமா?
.
.
.       சுவையற்ற இயம்பலும்
.              சொதப்பிய பிதற்றலும்
.                     தமிழ் கொல்லும் தரித்திரமே!

.       கலையற்ற பொருளினைத்
.              தமிழின் அழகென்றால்
.                     பழி சொல்லும் சரித்திரமே!
.
.
.       பண்கெட்ட பாட்டினை
.              பைத்தியக் கூத்தினை
.                      பாருக்குத் தமிழ் தருமா?
.
.       கண்கெட்ட குருடர்கள்
.              கலையது என்பார்கள்
.                     கலைமாது விலைக்கு ஆகுமா?
.
.
.       காசுக்கு நோபலை
.               யாரேனும் விற்றாலே
.                     கருணா நிதிக்குக் கிட்டும்!
.
.       கலைமகள் வாயின்றி
.              கதறி அழும்போது
.                     கண்ணீரில் இரத்தம் கொட்டும்!
.
.
.  பாகம்: 2
.
.       ஏதுக்கும் தேறாத
.              கூவத்துக் குப்பையை
.                     இலக்கியம் என்று மொழியவோ?
.
.       இதுவரை தாழாத
.              தமிழன்னைக் குடில்மீது
.                     எல்லாரும் வந்து உமிழவோ?
.
.
.       யாசித்த பொருளதை
.              யாருக்கும் தெரியாமல்
.                     நோபலுக்கு பரிந்து உரைக்கவோ?
.
.       யோசிக்கத் திறமின்றி
.              இருளிலே சுட்டதை
.                     பாருக்குத் திரிந்து உரைக்கவோ?
.
.
.       கன்னலே செந்தமிழே
.              கற்கண்டே தேன்பாகே
.                     கருணைக்கு அளவு இல்லையோ?
.
.       கருத்தையே திருடினும்
.              கருப்பையைச் சுருட்டினும்
.                     பொருமைக்கு எல்லை இல்லையோ?
.
.
.       இதுவரைப் படைத்திட்ட
.               இலக்கியம் யாதுக்கும்
.                     பரிசுக்குத் தகுதி இல்லையோ?

.       இவரன்றித் தமிழிலே
.              இதுகாறும் பரிசிலுக்கு
.                     யாரேனும் பிறக்க வில்லையோ?
.
.
.       சூதுக்கும் வாதுக்கும்
.              சூலாகிப் பெற்றதெலாம்
.                     சூத்திரம் சொல்லுது அம்மா!
.
.       யாதுக்கும் தேறாத
.              சாத்திரம் ஈதென்று
.                     சத்தியம் செய்யுது அம்மா!
.
.
.       கற்பனை எல்லாம்
.              விற்பனைக்கு என்றே
.                     கடைதனில் கிடைப்பதே போல்
.
.       கலைக்கான நோபலும்
.              காவியப் பரிசிலும்
.                     காசுக்குச் சிக்கி விடுமோ?
.
.
.       மாசிலா மொழியென
.               மாணிக்கச் சிலையென
.                     மாதவ மங்கை நல்லாள்;
.
.       ஏதமிலா மாதவள்
.              இலக்கியக் கலைமகள்
.                     இதயத்தே ஏதோ சொன்னாள்.
.
.
.       இன்னும் உயிரோடு
.              இருப்பது எதற்கென்று
.                     இயம்புக என மொழிந்தாள்!
.
.       இறந்திடத் துணிந்தேன்
.              இஃதொன்றே போதும்
.                     என்றே தான் பொழிந்தாள்!
.

***

You can listen this poem in my voice here:

http://thamikavithaikal.blogspot.com/2009/06/blog-post_9096.html


கருணாநிதிக்கு நோபல் பரிசு….

June 17, 2009

செய்தி: /////தமிழக முதல்வர் கருணாநிதியின் எழுத்துக்களை ஆங்கிலப்படுத்தி, அவற்றை நோபல் கமிட்டியின் பரிந்துரைக்காக அனுப்ப 12-பேர் அடங்கிய ஒரு குழு உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவுக்கு பாரதியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஜி.திருவாசகம் தலைவராம்.
இந்தக் கமிட்டியின் பிற உறுப்பினர்கள்:
1. கவிப்பேரரசு வைரமுத்து
2. அகத்தியலிங்கம்
3. மருதநாயகம்
4. வி.முருகன்
5. பி.கே.பழனிச்சாமி
6. கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன்
7. ரமணி
8. கவிஞர் சிற்பி பாலசுப்ரமணியம்
9. கயல் விழி
10. எம்.ரவிச்சந்திரன்
11. சி.சிவசண்முகம்
கருணாநிதியின் எழுத்துகளை (கவிதைகள், கட்டுரைகள், [முரசொலிக்?] கடிதங்கள்) பாரதியார் பல்கலைக்கழகம் மொழிமாற்றி வெளியிடுமாம். இதற்கு ரூ. 10 லட்சம் பணம் ஒதுக்கப்பட்டுள்ளது.
http://www.hindu.com/2008/07/07/stories/2008070759541000.htm
///////////////

கருணாநிதிக்கு நோபல் பரிசு….
கெடக்குறதெல்லாம் கெடக்கட்டும்
கிழவனைத் தூக்கி
மணையிலே வைன்னாங்களாம்…. 🙂

அடுத்த போஸ்ட்ல வைச்சுக்குவோம் கச்சேரிய…